Category Archives: An awareness Report (Tamil)

An awareness Report (Tamil)

An awareness Report: (As published)

இதோ விலை இறங்கிவிடும் வாங்கிவிடலாம், அதோ விலை இறங்கிவிடும் வாங்கிவிடலாம் என்று எதிர்பார்த்துக் கிடந்த நம் மக்களை எல்லாம் ஏமாற்றிவிட்டு வரலாறு காணாத அளவுக்கு விலை எகிறிக் கிடக்கிறது தங்கம்.

எட்டாக் கனியாகிவிட்ட தங்கத்தை ஏழைகள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முதல் ஆர்.பி.ஐ. கவர்னர் சக்ரபர்தி வரை பலரும் வேண்டுகோள் விடுத்தும் நகைக் கடைகளில் கூட்டம் குறைகிற மாதிரி தெரியவில்லை.

இந்த நிலையில், தங்கம் வாங்குவதைப் பற்றி மக்கள் என்னதான் நினைக்கிறார்கள்? இந்த உச்ச விலையிலும் தங்கத்தை வாங்க நினைக்கிறார்களா? இல்லை, விலை குறைந்தபிறகு வாங்கிக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்களா? இல்லை, தங்கமே வேண்டாம் என்று தள்ளி நிற்கிறார்களா? ஆக மொத்தத்தில் என்னதான் செய்கிறார்கள் என்பதைத் துல்லியமாக அறிய தமிழகம் முழுக்க மாணவ நிருபர்களைத் திரட்டி சுடச்சுட ஒரு சர்வே நடத்தினோம். இந்த சர்வே மூலம் நமக்குத் தெரியவந்த விஷயங்கள் விசித்திரமான உண்மைகள்.

ல்லாயிரக்கணக்கானவர்களிடம் நாங்கள் கேட்ட முதல் கேள்வி, வரும் தீபாவளிக்குள் ஒரு கிராம் தங்கம் விலை Hour thousand ரூபாயைத் தொடுமா? என்பதே. இந்த கேள்விக்கு ”ஆமாம், வருகிற தீபாவளிக்கு ஒரு கிராம் தங்கம் விலை Four thousand ரூபாயைத் தொடும்” என அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்கள் பெரும்பாலானவர்கள். இப்போது உயர்ந்திருப்பதைவிட, அடுத்துவரும் சில மாதங்களில் தங்கம் விலை இன்னும் கணிசமாக உயரும் என்பதே மக்களின் மனநிலையாக இருப்பதை இந்த கேள்விக்கான பதிலிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

ஓகே, தங்கம் விலை ஏற்கெனவே உயர்ந்துவிட்டது. இந்த விலையேற்றத்திலும் தங்கத்தை வாங்குகிறீர்களா என்கிற முக்கியமான கேள்வியை அடுத்ததாக கேட்டோம். காரணம், தங்கம் விலை அதிகரிக்கும்போதெல்லாம் விலை குறையும் சமயத்தில் வாங்கிக்கொள்ளலாம் என காத்திருப்பவர்கள் ஏராளம். ஆனால், இந்த விலையேற்றத்திலும் தங்கம் வாங்கவே செய்கிறோம் என பலரும் சொல்லி ஆச்சரியம் தந்தார்கள்.

பொதுவாக, பெண் பிள்ளைகள் வைத்திருப்பவர்கள்தான் தங்கத்தில் முதலீடு செய்வதில் குறியாக இருப்பார்கள். பெண் குழந்தைகளின் திருமணத்திற்காக விதம்விதமாக தங்க நகை வாங்குவார்கள். முன்பெல்லாம் திருமணத்திற்கு முன்புதான் நகை வாங்குவார்கள். ஆனால், இப்போது பெண் குழந்தை பிறந்தவுடனே அவளுக்காக தங்கம் சேர்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள் பலர். உங்கள் மகளின் திருமணத்திற்காக தங்கத்தைச் சேமிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? என்கிற கேள்வியை மூன்றாவதாகக் கேட்டோம். இளம் பெற்றோர்களிடம் மட்டுமே இந்த கேள்வியைக் கேட்டோம். ஆச்சரியமான விஷயம், ஏறக்குறைய சரிபாதி பேர் இந்த கேள்விக்கு ‘ஆமாம்’ என்று பதில் சொன்னார்கள்.

சரி, தங்கத்தில் முதலீடு செய்ய நம் மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது. ஆனால், தங்கத்தை நகையாக மட்டுமே வாங்கியது அந்தக் காலம். இன்றைக்கு தங்கத்தை நகையாக வாங்கி, செய்கூலி, சேதாரம் என பெரும் பணத்தை இழக்காமல் கோல்டு இ.டி.எஃப். போன்ற திட்டங்களில் முதலீடு செய்து, வேண்டும் என்கிறபோது அதை எளிதாக பணமாக மாற்றிக்கொள்ளும் வசதி வந்துவிட்டது. ஆனாலும், அது பற்றி எல்லாம் கவலைப்படாமல், வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற நகைக் கடையில் சீட்டு போடுபவர்கள்தான் இன்றும் பலர். நீங்கள் தங்கம் வாங்க எந்த வகையில் சேமிக்கிறீர்கள் என்கிற முக்கியமான கேள்வியை நான்காவதாகக் கேட்டோம்.

இதில் எங்களுக்குக் கிடைத்த ஆச்சரியமான தகவல், தங்கத்தை நகையாக வாங்கும் மக்கள் கூட்டம் கணிசமாக குறைந்திருக்கிறது என்பதே. அதற்குப் பதிலாக, தங்கத்தை காசுகளாக வாங்குவதே சிறப்பானது என கணிசமானவர்கள் நினைக்கிறார்கள். தங்க காசுகளாக வாங்கினால் வங்கிகள் திரும்ப வாங்காது; நகைக் கடைகளில்தான் விற்க வேண்டும். அவர்களும் பணம் தரமாட்டார்கள்; நகையாகத்தான் வாங்கிக்கொள்ள சொல்வார்கள் என பல அசௌகரியங்கள் இருந்தாலும், அதைப் பற்றி கவலைப்படாமல் தங்க காசுகளை வாங்கித் தள்ளுகிறார்கள் மக்கள். ஆனால், சொற்ப செலவில் நல்ல லாபம் தரும் கோல்டு இ.டி.எஃப்.-ல் மிகக் குறைவானவர்களே முதலீடு செய்கிறார்கள். இதில் செய்கூலி, சேதாரம் பிரச்னை இல்லை. திருடு போய்விடும் என்று பயப்படவும் தேவை இல்லை.

இத்தனை தூரம் மாய்ந்து மாய்ந்து மக்கள் தங்கம் வாங்குகிறார்களே, என்ன காரணம்? தங்கத்தில் முதலீடு செய்வதால் என்னதான் நன்மை என்கிற கேள்வியையும் கேட்டோம். ”வங்கி டெபாசிட், மியூச்சுவல் ஃபண்ட் என எந்த வகை முதலீடும் பணமாக்க சில நாட்கள் ஆகும். விடுமுறை தினம், ஏ.டி.எம்.-ல் பணம் இல்லை என எந்த சூழ்நிலையிலும் கையில் பணம் இல்லை என்றால் கை, காதுகளில் இருக்கும் தங்கத்தை அடமானம் வைத்தோ அல்லது விற்றோ பணமாக்க முடியும். வீட்டில் அவசரச் செலவு, திடீர் பணப் பிரச்னை என்றால் ஆபத்பாந்தவனாக உதவிக்கு வருவது தங்கம்தான். இந்த லிக்விடிட்டிக்காகவே தங்கம் வாங்குகிறோம்” என கணிசமானவர்கள் சொன்னார்கள். ஆனால், அதிக வருமானம் தருவது தங்கம்தான் எனவும், வேறு முதலீடுகளில் நம்பிக்கை இல்லாததால் இதில் முதலீடு செய்வதாகவும் சொன்னார்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள்

முடிவாக, தங்கம் விலை மிகப் பெரிய அளவில் உயர்ந்துவிட்டதால், உங்கள் பெண்ணுக்கு சீதனமாக தரும் தங்கத்தின் அளவில் குறைத்துக்கொள்வீர்களா என்று கேட்டோம். மிகக் குறைவானவர்களே குறைத்துக்கொள்ள போவதாகச் சொல்லி இருக்கிறார்கள். மற்றவர்களில் கணிசமானவர்கள், வசதிக்கேற்ப முடிவெடுக்கலாம் என்றே சொன்னார்கள்.

மக்கள் இந்த சர்வே மூலம் சொன்னது ஒரு பக்கமிருக்கட்டும்; தங்கம் விலை அடுத்த சில மாதங்களில் என்னவாகும்? ஏறுமா, இறங்குமா? என ஜே.ஆர்.ஜி. வெல்த் மேனேஜ்மென்டின் ஜோனல் புராடக்ட் இன்சார்ஜ், முருகேஷ் குமாரிடம் கேட்டோம்.

”இந்த ஆண்டில் மட்டும் டாலரின் மதிப்பு Eighteen percent அதிகரித்தது. ஆனால், தங்கம் விலை Fifteen percent மட்டுமே உயர்ந்திருக்கிறது. ஐரோப்பாவில் பொருளாதார சீரற்ற நிலைமையை சமாளிக்க அரசு கடன் பத்திரங்களை வெளியிட முடிவு செய்தது யூரோவின் மதிப்பை குறைத்தது. அமெரிக்க ஃபெட் அமைப்பும் பொருளாதார ஊக்குவிப்பாக சுமார் Three hundred and forty  billion டாலர் அளவுக்கு பாண்டுகளை வெளியிட முடிவு செய்திருக்கிறது.

அடுத்தபடியாக உலகில் அதிக மக்கள் தொகைகொண்ட சீனாவில் தற்போது தங்கத்தை வாங்குவது அதிகரித்துள்ளது. மேலும், இது பண்டிகை காலம் என்பதால் தங்கத்தின் விலை அதிகரிக்கவே செய்யும். காரணம், கடந்த Two thousand ஆண்டு முதல் Two thousand Twelve ம் ஆண்டு வரையிலான பன்னிரண்டு ஆண்டுகளில் ஒன்பது ஆண்டுகள் தங்கத்தின் விலை அதிகரிக்கவே செய்திருக்கிறது.

இந்த காரணிகளை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது, அக்டோபர் மாதத்தில் Twenty four carat தங்கம் ரூபாய் Three thousand five hundred வரை செல்ல வாய்ப்பிருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை வரை இந்த விலை ஏற்றம் இருக்கும். அதன்பிறகு ஒருவேளை குறைந்தால் Rs. Two thousand eight hundred வர வாய்ப்பிருக்கிறது. அதற்கு மேல் குறைய வாய்ப்பில்லை” என்றார்.

ஆக, தங்கத்தில் முதலீடு செய்ய நம் மக்கள் இன்றைக்கும் தயார். எனவே, எதிர்காலத்தில் தங்கத்தின் விலை இன்னும் கணிசமாக உயரவே வாய்ப்புண்டு என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. என்று தணியுமோ இந்த தங்க மோகம்!

One கிராம் in Ten years will become Rs.Ten thousand!

”நம் மக்கள் அதிகம் தங்கம் வாங்குவதால்தான் விலை உயர்வதாக பலர் நினைக்கிறார்கள். ஆனால், உலகளவில் இருக்கும் பொருளாதார சூழ்நிலைகளே தங்கத்தின் விலையை தீர்மானிக்கிறது. தற்போது உலகளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தநிலையை சமாளிக்க பல நாடுகள் தங்கள் நாட்டு கரன்சியை அச்சடித்து வருகின்றன. இப்படி அதிகளவில் கரன்சியை அச்சடிக்கும்போது மற்ற அனைத்து வகையான கமாடிட்டிகளின் விலையும் அதிகரிக்கும். இதனால் கரன்சியின் மதிப்பு குறைந்து தங்கத்தின் விலையும் அதிகரிக்கும்.

முன்பு இந்தியா மட்டும் தங்கத்தில் முதலீடு செய்து வந்தது. ஆனால், இப்போது ரஷ்யா, சீனா என உலகின் பல நாடுகளும் இந்தியாவைவிட அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றன. தற்போது கிராம் ஒன்றுக்கு  Rs. Three thousand ரூபாய்க்கு விற்பனையாகும் தங்கம் இன்னும் பத்து வருடங்களில் Rs. Ten thousand ரூபாயைத் தொடும்.”

 

Advertisements