மிஸ்ட்கால் சேவை

மிஸ்ட்கால் சேவை

குறிப்பிட்ட எண்ணுக்கு போன் செய்தால் நிமிடத்திற்கு கட்டணமாக 5 ரூபாய் வசூலிப்பார்கள் என்று நமக்கு தெரியும் ஆனால் ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு

போன் செய்தவுடன் நம் கண

க்கில் இருந்து ரூ.800 வரை ஒரே நொடியில் கொள்ளையடிக்கின்றனர் எப்படி இவர்கள் வலைவீசுகின்றனர் இதிலிருந்து தப்பிக்க நாம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதைப்பற்றிய வின்மணியின் சிறப்பு பதிவு.

ஒரு குறிப்பிட்ட போன் நம்பரில் இருந்து நமக்கு ஒரு அழைப்பு வருகிறது

ஒரே ரிங்கில் (One Ring) அது துண்டிக்கப்பட்டுவிடுகிறது, நாம் அந்த குறிப்பிட்ட

எண்ணை நாம் தொடர்புகொண்டால் நம் கணக்கில் இருந்து ரூ.800 அல்லது

$15 டாலர் வரை சுருட்டிவிடுகின்றனர், கடந்த மாதம் தான் இந்த கொள்ளைக்

கும்பல் இந்தியாவில் தன் கைவரிசையைக் காட்டி வருக்கிறது பல பேர்

இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் இருந்து நாம்

தப்பிப்பது எப்படி என்பதைப்பற்றி இனி விரிவாகப் பார்க்கலாம்.

கொள்ளை அடிக்கும் கும்பல் இங்கு குறிப்பிட்டு இருக்கும் போன் நம்பர்

+375602605281, +375295297419,+378602607284,+375301605287,+3754426035289,+3712791309

அல்லது +375 ல் தொடங்கும் எந்த போன் நம்பரில் இருந்தும் அழைக்கலாம்,

இவர்கள் உங்கள் போனுக்கு ஒரு மிஸ்ட்கால் மட்டுமே கொடுக்கின்றனர்

அதுவும் ஒரே ரிங்கில் துண்டிக்கப்பட்டுவிடும், குறிப்பாக இரவு நேரங்களில்

தான் இது போன்ற எண்ணில் இருந்து அழைப்பு வருகிறது. நாம் என்ன

செய்வோம் வந்திருக்கும் நம்பருக்குப் போன் செய்தால் ஹிந்தியில்

அல்லது புரியாத மொழியில் பேசுகின்றனர். நமக்கு அழைப்புக் கட்டணமாக

ரூ.820 அல்லது $15 வரை எடுத்துக்கொள்கின்றனர், நீங்கள் இவர்களுக்கு

அழைப்புச் செய்யும் போதும் உங்கள் போனில் இருக்கும் அத்தனை Contact

Number -க்கும் இது போன்ற மிஸ்ட்கால் சேவையைத் துவங்குகின்றனர்

 
இதைத்தவிர உங்கள் போனில் வங்கிக் கணக்கு எண் மற்றும் கடவுச்சொல்

இருந்தால் அதையும் திருடுகின்றனர். கடந்த நாட்களில் பல பேர் இதனால்

பணத்தை இழந்துள்ளனர். உங்களுக்கு இது போன்ற எண்ணில் அல்லது +375

எனத் தொடங்கும் எந்த எண்ணில் அல்லது + குறியுடன் அறிமுகமற்ற

எண்களில் இருந்து அழைப்பு வந்தாலும் நீங்கள் போன் செய்யாதீர்கள்.

உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் நம் தமிழ்

உள்ளங்களுக்கும் இந்த தகவலைக் கொண்டு சேருங்கள்.

பொருள் இழப்பையும் மனவேதனையையும் தவிர்த்திடுங்கள் !