சிவசேனா தலைவர் பால் தக்கரே இறுதி ஊர்வலம்

சிவசேனா தலைவர் பால் தக்கரே இறுதி ஊர்வலத்தின் போது அவர் மீது இந்திய தேசியக்கொடி போர்த்த பட்டிருந்தது. ஒருமுறை கூட தேர்தலில் நிற்காத இந்த போரையே பார்காத அரசருக்கு

எதற்கு அரசு மரியாதை?

நாட்டுக்காக உயிர்விட்ட போர் வீரர்களுக்கும் நாட்டின் முன்னேற்றத்திர்காக பாடுபட்ட அரசியல் தலைவர்களுக்கும் மட்டும் கிடைக்கும் கவுரவம் இந்த இறுதி மரியாதை…ஆனால் பால் தக்கரே போன்றகொலைகாரர்களுக்கு ஏன் இந்த மரியாதை..

இவர் என்ன…

1.ஜனாதிபதியா..

2.முதலமைச்சரா..

3.நாட்டுக்காக உயிர்விட்ட போர் வீரரா..

4.சமூக வளர்ச்சிகாக போராடியவரா..

உண்மையை சொல்ல போனால்..மேலே குறிப்பிட்டுல்ல அனைத்திற்கும் எதிரானவர்..அவர் செய்த சாதனைகள் என்ன தெரியுமா?

1.1999-ல் தேர்தல் ஆணையத்தால் தேர்தலில் நிற்க்கவும் ஓட்டுப்போட தடை செய்யப்பட்ட ஒரே அரசியல்வாதி என்ற பெருமைக்குரியவர்..

2.1992 -ல் நடந்த மிகப்பெரிய கலவரத்தின் சூத்திரதாரி.

3.சிவசேனை என்ற பெயரில் உள்நாட்டு கலவரத்தை நடத்த கலவரப்படை உருவாக்கியவர்.

4.2002 -ல் இஸ்லாமியர்களுக்கு எதிராக தற்கொலை படையை திரட்டுவோம் என்று பகிரங்க அறிவிப்பு கொடுத்தவர்.

5.தென் இந்தியர்கள் மகாராஸ்டிர மாநிலத்தில் இருக்ககூடாது என்று அறிவிப்பு விட்டவர்.

6.சிவசேனை படையை கொண்டு வடஇந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்.

இந்திய நாட்டில் இஸ்லாமியர்கலும் கிறிஸ்தவர்களும் புற்று நோய் போன்றவர்கள் அவர்களை அழிக்கும் வரை ஓயகூடது என்று கூரியவர்.இந்திய தேசியக்கொடியின் மூன்று வண்ணங்களில் காவிவண்ணத்தை மட்டும் திணிக்க முயன்ர அவருக்கு தேசியக்கொடி மரியாதை தேவையா?

நாட்டில் பிரிவினையை கொண்டுவந்து நாட்டின் அமைதியை குலைத்து,பலரின் உயிரை பறித்த இவருக்கு ஏன் தேசிய மரியாதை?

தற்கொலை படையை திரட்டுவோம் என்று பகிரங்க அறிவிப்பு கொடுத்த இவர் தீவிரவாதி இல்லையா?

மனித உருவத்தில் பலரின் ரத்தத்தை குடித்த இவரும், நாட்டு மக்களுக்காக எல்லையில் உயிர் விட்ட மாபெரும் வீரர்களும் சமமா?

அறிவுல்லவர்கள் பதில் சொல்லவும்……