ரயில் டிக்கெட் புக்கிங்

(As Published)

ரயில் டிக்கெட் புக்கிங்: இனி கிரெடிட்-டெபிட் கார்டுகள்
தேவையில்லை-செல்போன் இருந்தால் போதும்

டெல்லி: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய தற்போது கிரெடிட் கார்டு,
டெபிட் கார்டு தேவையில்லை. இண்டர் பேங்க் மொபைல் பெய்மெண்ட்
சிஸ்டம்(ஐ.எம்.பி.எஸ்) என்ற புதிய வசதியின் மூலம் ரயில் டிக்கெட்
முன்பதிவை மொபைல்போன் மூலம் எளிதாக செய்ய இந்திய ரயில்வே கேட்ரிங் மற்றும் சுற்றுலா துறை (ஐ.ஆர்.சி.டி.சி) அனுமதி அளித்துள்ளது.

ரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்ய தற்போது பல வசதிகள் உள்ளன. நேரடியாக சென்று முன்பதிவு செய்வதற்கு பதிலாக, இணையதளத்தின் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் அதற்கான கட்டணத்தை செலுத்தும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் கிரேடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு இல்லாதவர்களுக்கு, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில் இண்டர் பேங்க் மொபைல் பெய்மெண்ட் சிஸ்டம் (ஐ.எம்.பி.எஸ்) என்ற முறையின் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால், பணம் செலுத்த டெபிட் கார்டு, கிரேடிட் கார்டு ஆகியவை தேவைப்படாது. மேலும் டிக்கெட் முன்பதிவு செய்ய ஒரு கம்ப்யூட்டர் கூட தேவையில்லை.

இந்த புதிய திட்டத்தை ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகப்படுத்தி உள்ளது.
செல்போனில் இருந்து அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ். மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும். டிக்கெட் முன்பதிவு செய்த நபரின் வங்கி கணக்கில் டிக்கெட் கட்டணத்திற்கான பணம் பிடித்தம் செய்யப்படும். இந்த வசதியை பெற விரும்பும் நபர்கள் தனது செல்போன் எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை பதிவு செய்து, மொபைல் பண பரிவர்த்தனைக்கான குறியீடு (எம்.எம்.ஐ.டி) மற்றும் மொபைல் ரகசிய எண் ஆகியவை பெற்று கொள்ள வேண்டும்.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது Up to Rs.5000  வரையிலான பண
பரிமாற்றம் செய்ய Rs.Five கட்டணம் பிடித்தம் செய்யப்படும். அதற்கு
மேற்பட்ட பண பரிவர்த்தனைகளுக்கு Rs..Ten கட்டணம் வசூலிக்கப்படும். இந்த புதிய வசதியின் மூலம் இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய உள்ள அனைத்து வசதிகளையும், செல்போன் மூலம் பெற முடியும்.

_சபரிமலையில் சாமி தரிசனம்: ஆன்லைன் முன்பதிவு அடுத்த மாதம் துவக்கம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் மண்டல, மகர விளக்கு சீசனில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு வரும் அக்டோபர் முதல் வாரத்தில் துவங்குகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே போகிறது. மண்டல, மகர விளக்கு சீசனில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தும், தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதையடுத்து பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்ய ஆன்லைன் முலம் முன்பதிவு செய்யும திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. கேரள போலீசார் இந்த தி்ட்டத்தை தொடங்கினர்.

இந்த திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. கடந்த வருடம் Fifteen
Lacs மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில் இந்த வருடமும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பக்தர்கள் தரிசனம் செய்ய விரும்பும் நாளுக்கு Six to Eight weeks முன்பு வரை முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதற்காக கோவில் இணையதளம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.

பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்யும் தேதி, நேரம், பெயர், வயது,
புகைப்படம், முகவரி, புகைப்பட அடையாள அட்டை ஆகிய விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதன் பிறகு பதிவுக்கான கூப்பன் வழங்கப்படும். இந்த கூப்பனை பக்தர்கள் இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதில் பக்தரின் பெயர், புகைப்படம், தரிசன தேதி, நேரம், குறியீட்டு எண்
ஆகியவை இடம் பெற்றிருக்கும். இந்த கூப்பனை பக்தர்கள் தரிசனத்துக்கு
வரும்போது கொண்டு வர வேண்டும். பம்பையில் தனியாக அமைக்கப்பட்டுள்ள கேரள போலீஸ கவுன்டரில் கூப்பனை சரிபார்த்தபின் சன்னிதானத்தில் தனி வரிசையில் நின்று, தரிசனம் செய்து கொள்ளலாம். இதற்கான முன்பதிவு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்குகிறது. புரட்டாதி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. வருகிற 21ம் தேதி இரவு வரை சபரி்மலை கோயில் நடை திறந்திருக்கும்.